Madurai News

மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி இந்திய வீரர்கள் அபாரம்!
Saturday 20, Jan 2018

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு மூன்றாவது சுற்றுக்கு இந்தியாவின் போபண்ணா ஜோடி, திவிஜ் சரண் ஜோடி முன்னேறி அசத்தியது. ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. இதன், ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் போபண்ணா, பிரான்ஸின் ரோஜர் வாசலின் ஜோடி, அர்ஜென்டினாவின் லியானார்டோ மேயர், போர்சுகலின் சவுசா ஜோடியை எதிர் கொண்டது. இதன் முதல் செட்டை 6–2 என போபண்ணா ஜோடி எளிதாக வென்றது. அடுத்த செட்டை, போபண்ணா ஜோடி 7–6 என, கைப்பற்றியது. முடிவில், இந்தியாவின் போபண்ணா ஜோடி 6–2, 7–6 என வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் மற்றொரு போட்டியில் இந்தியாவின் திவிஜ் சரண், அமெரிக்காவின் ராஜிவ் ராம் ஜோடி, இத்தாலியின் பேபியோ பாக்னினி, ஸ்பெயினின் கிரானலர்ஸ், ஜோடியை 4–6, 7–6, 6–2 என போராடி வென்று, மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last