Madurai News

தென் ஆப்ரிக்க வீரர்களுக்கு வெயிட்டான வார்னிங் கொடுத்த ‘டான்’ ரோகித் !
Wednesday 27, Dec 2017

தென் ஆப்ரிக்க அணிக்கு இந்தியாவின் துணைக்கேப்டன் ரோகித் சர்மா வெயிட்டான வார்னிங் கொடுத்துள்ளார். இந்தியா வந்த இலங்கை அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று தொடர்களையும் இழந்து வெறும்கையுடன் நாடு திரும்பியது. இத்தொடரில் இலங்கையின் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் நிக் போதஸ் இருந்தார். இந்நிலையில் இத்தொடரை தொடர்ந்து தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. தென் ஆப்ரிக்க மண்ணில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இதுவரை தொடரை கைப்பற்றியதே இல்லை. இந்த வரலாற்றை இளம் கோலி தலைமையிலான இந்திய அணி மாற்றி எழுதும் என பலரும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய ஒருநாள் அணியின் துணைக்கேப்டன் ரோகித் சர்மா தென் ஆப்ரிக்க வீரர்களுக்கு வார்னிங் கொடுத்துள்ளார்.

More Madurai News links
First        1  2  3  4  5  6  7  8  9  10  11       Next        Last