புதுடெல்லி: ‘ மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க, அஷ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது ஸ்டைலை மாற்றினால் மட்டுமே சாதிக்க முடியும்.’ என இந்திய துணைக்கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் பங்கேற்கும் இளம் கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதில் பங்கேற்கும் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் இன்று தென் ஆப்ரிக்கா கிளம்பினர். இந்நிலையில் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள இந்திய சுழற்பந்துவீச்சாளர்களான அஷ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் ஒருநாள் அணியில் புறக்கணிக்கப்பட்டனர்.
இவர்கள் தங்களது பவுலிங் ஸ்டைலை மாற்றி தென் ஆப்ரிக்க மண்ணில் சாதித்தால், மீண்டும் ஒருநாள் அணியில் சிறப்பாக செயல்பட முடியும் என தெரிவித்துள்ளார்.